தி மெயில்
தி மெயில், (The Mail) தி மெட்ராஸ் மெயில் (The Madras Mail) என்று 1928ஆம் ஆண்டு வரை அழைக்கப்பட்ட, அப்போதைய சென்னை மாகாணத்தில் 1868ஆம் ஆண்டு முதல் [1] 1981ஆம் ஆண்டு வரை வெளிவந்த செய்தித்தாளாகும்.
மாலை செய்தித்தாள்
[தொகு]இது இந்தியாவில் தமிழ்நாட்டில் தற்போதைய சென்னையிலிருந்து வெளியான முதல் மாலை செய்தித்தாளாகும்.[2][3]
வரலாறு
[தொகு]தி மெட்ராஸ் மெயில் சார்லஸ் லாசன் மற்றும் ஹென்றி கார்னிஸ் என்ற இரு பத்திரிக்கையாளர்களால் 14 டிசம்பர் 1868இல் தொடங்கப்பட்டது. இவ்விதழை ஆரம்பிப்பதற்கு முன்னர் இவர்கள் இருவரும் தி மெட்ராஸ் டைம்ஸ் இதழில் ஆசிரியர்களாகப் பணி புரிந்துவந்தனர். அவ்விதழின் உரிமையாளர்களான காண்ட்ஸ் மற்றும் சன்ஸ் நிறுவனத்தாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக அங்கிருந்து பணி விலகினர். பின்னர் தி மெட்ராஸ் டைம்ஸ் மற்றும் தி இந்து செய்தித்தாள்களுக்குப் போட்டியாக தி மெட்ராஸ் மெயில் உருவெடுத்தது.
1921இல் இவ்விதழானது ஐரோப்பிய வணிகரான ஜோன் ஓக்ஷோட் ராபின்சன் என்பவரால் வாங்கப்பட்டு, அவருடைய வணிகக்குழுமத்தோடு இணைக்கப்பட்டது. 1945இல் இந்திய பெரும் வணிகரான எஸ். அனந்தராமகிருஷ்ணன் [4] என்பவரால் வாங்கப்பட்டு, 1981இல் அவராலும் அவருடைய குடும்பத்தாராலும் நிர்வகிக்கப்பட்டு வந்தது.
சான்றுகள்
[தொகு]- ↑ விடுதலைப் போரில் தமிழ் பத்திரிகைகள்
- ↑ Hena Naqvi (1 January 2007). Journalism and Mass Communication. Upkar Prakashan. pp. 58–. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7482-108-9. பார்க்கப்பட்ட நாள் 27 June 2016.
- ↑ "The Mail: Failure of circulation". P.S. Vaidyanathan. India Today. 22 October 2013. பார்க்கப்பட்ட நாள் 30 June 2016.
- ↑ தொழில் முன்னோடிகள்: எஸ். அனந்தராமகிருஷ்ணன் (1905 - 1964), தி இந்து தமிழ் திசை, 14 பிப்ரவரி 2017
வெளி இணைப்புகள்
[தொகு]- D. Sadasivan (1974). Growth of public opinion in the Madras Presidency (1858-1909). University of Madras. p. 61.
- S. Muthiah (11 June 2003). "Memories of The Mail". The Hindu இம் மூலத்தில் இருந்து 12 ஆகஸ்ட் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070812094204/http://www.hinduonnet.com/thehindu/mp/2003/06/11/stories/2003061100150300.htm.
- Chennai in Focus[தொடர்பிழந்த இணைப்பு]
- உ.வே. சாமிநாதையரும் இதழியல் துறையும், கீற்று
- சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர் வாழ்வும் சிந்தனையும், கே.முருகேசன், சி.எஸ்.சுப்பிரமணியம்
- அமால்கமேஷன்ஸ் ஓர் அற்புதம், தினமலர், 1 ஆகஸ்டு 2014